தமிழ் தேசிய உணர்வை இறுக பற்றி நிற்கும் மட்டக்களப்பு மக்கள் : சிறிநாத் எம்.பி பெருமிதம்
யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு.இவ்வாறு பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அடிக்கட்டுமான பணிகள் மற்றும் மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை கடந்த கால அரசுகள் செய்யவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொருளாதாரத்தில் நலிந்திருந்தாலும் அவர்களுக்கு தமிழ் தேசிய உணர்வு துளியும் மாறாமல் அப்படியே இருந்தது.
அத்துடன் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு கடந்த கால அரசுகளால் கபளீகரம் செய்யப்பட்டது.
இவ்வாறு ஐபிசி தமிழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் அதில் இலங்கை தமிழரசு கட்சியின் வகிபாகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அவல நிலை என்பன தொடர்பாக அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
