“ஏமாறாதீர்கள்! அனைத்தும் பொய்...” மக்கள் வங்கி சிறப்பு அறிக்கை
sri lanka
people
peoples bank
By Shalini
மக்கள் வங்கியின் 60 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையத்தின் மூலம் நடத்தப்பட்ட போட்டியில், பணப்பரிசு பெறுவதாக வெளியாகி வரும் தகவல்கள் போலியானவை என மக்கள் வங்கி ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த இணைய விளம்பரத்தில் 30,000 ரொக்க பரிசுத் தொகை வழங்கப்பட்டதாக கூறி மக்களை ஏமாற்றும் பணியில் மர்ம கும்பல் ஈடுபட்டுள்ளதாக வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தாம் அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்றும், இதுபோன்ற போலி கதைகளுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.