காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை : வெளியான தகவல்
காவல்துறையின் மீது கிராமத்தின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், காவல்துறையின் மரியாதைக்குரிய பெயரையும் நம்பிக்கையையும் மக்களிடம் மீட்டெடுக்க விரிவான திட்டத்தில் அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் தற்போது சுதந்திரமாக உறங்கவும் சுவாசிக்கவும் விரும்புகின்றனர்.
இராணுவத்தினரின் மனஉறுதியை குறைக்கும்
அரசாங்கம் தவறு செய்தால் ஜே.வி.பி.க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை வழங்க வேண்டும் எனவும், அதனை எதிர்க்க வேண்டும் எனவும், ஆனால் இராணுவத்தினரின் மனஉறுதியை குறைக்கும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
போராட்டம் மக்களுக்கு கசப்பாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |