முல்லைத்தீவில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : நீதிமன்றத்தின் உத்தரவு
முல்லைத்தீவில் 13 வயது சிறுமியான பாடசாலை மாணவியை வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் வசிக்கும் சிறுமியே வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டவராவார்.
குறித்த சிறுமியை காணவில்லை எனத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை (18) தாயார் புதுக்குடியிருப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சிறுமியும் இளைஞனும் கைது
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று(21) சிறுமியையும் இளைஞனையும் முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் வைத்து கைது செய்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு
பின்னர் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளானமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளைஞனை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியபோது டிசம்பர் 5ஆம் திகதிவரை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |