கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்து தடம் புரண்டுள்ளது.
இந்த கடுகதி தொடருந்து இன்று (5) அதிகாலை 4.40 அளவில் கங்கொட மற்றும் கடிகமுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
தொடருந்து பாதையில் மண் சரிவு மற்றும் கற்கள் விழுந்திருந்தமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தொடருந்து தூக்கி வீசப்பட்டது
இதன் காரணமாக மலையகப் பாதையிலான அனைத்து தொடருந்து சேவைகளும் தாமதமடைந்துள்ளன.

'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக தொடருந்தே (Office Train) இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இந்த விபத்தினால் தொடருந்தின் முன்பகுதிக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தொடருந்தின் சாரதியான டீ.ஏ.பி. செந்தநாயக, "பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்தது.
நாங்கள் அதனைப் பார்க்கும்போது 10 மீற்றர் தூரம்கூட இருக்கவில்லை. மண் திட்டில் மோதியவுடன் தொடருந்து தூக்கி வீசப்பட்டது. அவ்வாறு மோதிய வேகத்திலேயே பாறையொன்றில் மோதி சேதம் ஏற்பட்டது" எனக் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |