கடுமையான கட்டுப்பாடுகளுடன் திருமண வைபவங்களுக்கு அனுமதி?
corona
sri lanka
people
By Shalini
கொரோனா சுகாதார வழிகாட்டலின் கீழ், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான விருந்தினர்களைக் கொண்டு திருமண வைபவங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நடத்தப்படவுள்ள திருமண வைபவங்களை மதுபான உபசாரமின்றி நடத்தவும், பூரணமாகத் தடுப்பூசிகளைப் பெற்றவர்களை மாத்திரம் திருமண வைபவங்களில் அனுமதியளிக்கும் வகையிலும் சுகாதார வழிகாட்டல் ஒன்றை தயாரிக்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் சிறிய, நடுத்தரளவு திருமண சேவை வழங்குநர் சங்கங்கள் இதற்கான இணக்கத்தை தெரிவித்திருப்பதுடன், இந்தக் கோரிக்கை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியிடம் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.