இன்று முதல் இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதி - வெளிவரவுள்ள வர்த்தமானி
sugar
important
permisson
By Sumithiran
இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன ( Damayanti Karunaratne) தெரிவித்துள்ளார்.
இதற்காக கேள்வி கோரல்களை திறக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
சீனி இறக்குமதிக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 81 கொண்டெய்னர்கள் நாளை (01) முதல் 10 நாட்களுக்குள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் (Ananda Peiris) இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.