மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Pavi
அலவத்துகொடை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி
விபத்து தொடர்பில் தெரியவருகையில், வீடொன்றின் அத்திவாரம் தோண்டும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அலவத்துகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொடை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 25 நிமிடங்கள் முன்