ஹொரண பாதுக்க வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி
கபல்லகொட பிரதேசத்தில் ஹொரண பாதுக்க வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது கபல்லகொட பிரதேசத்தில் ஹொரண பாதுக்க வீதியில் அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோதியிதனாலேயே ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த மாத்தளை மனன்வத்தை தல்வத்த வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய அசங்க புஷ்பகுமார செனவிரத்ன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் 21 வயதான மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை ஹொரணை பாதுக்க வீதியில் ஹொரணை நோக்கி அதிவேகமாக செலுத்தியபோது கபல்லகொட பிரதேசத்தில் வீதியை கடந்தவர் மீது மோதுண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்