வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்: விசாரணைகள் தீவிரம்
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
தம்புள்ளை, வெவலவெவ பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பில் காவல்துறையினருக்கு நேற்று (27) தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தவர் 45 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அத்தோடு, தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்