கத்தரிக்காய் குறித்து ஆய்வில் வெளியான தகவல்
நாட்டிலுள்ள சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்தரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுதல்
இது குறித்து அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் பியும் டி.ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திடம் தெரிவித்ததாவது
“காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுவதால் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
அத்துடன் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |