தன்னை கைது செய்ய வேண்டாம்.! கோட்டாபயவின் மனு இன்று விசாரணை
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
Law and Order
By Dhilak
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) பரிசீலிக்கவுள்ளது.
இந்த மனு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு பரிசீலனை
இதன்போது, வழக்கின் உண்மைகளைச் சரிபார்ப்பதற்காக இம்மனுவை இன்றைய தினம் மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்