ரணில் தாக்கல் செய்த ரிட் மனு! நீதிமன்றம் கொடுத்த பணிப்பு
அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அரச தலைவர் விசாரணை ஆணைக்குழுவின் (Presidential Commission) கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆதரவிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, நீதியரசர் தேவிகா அபேரத்ன மற்றும் நீதியரசர் டி.எம்.சமரகோன் ஆகியோரை உள்ளடக்கிய குழு, குறித்த மனுவை ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மனுவில், மனுதாரர் தொடர்பான 17-51 பக்கங்களில் உள்ள கண்டறிதல் மற்றும் பரிந்துரைகளின் செயற்பாட்டை இடைநிறுத்த இடைக்கால உத்தரவை கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
கடந்த 2020ஆமே் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி, அரச தலைவர் ஆணைக்குழுவில் தான் கலந்துகொண்டதாகவும் தான் பிரதிவாதியாக கருதப்படவில்லை என்றும் சாட்சியாக மாத்திரம் கருதப்படுவதாகவும் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டது.
மேலும் மனுதாரர், தனக்கு எதிராக எந்த கண்டறிதலும் பரிந்துரைகளும் செய்யமாட்டார்கள் என்று நம்புகின்றேன். எவ்வாறாயினும், அரச தலைவர் ஆணைக்குழுவின் அறிக்கையில் கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் உள்ளன என்று மனுதாரர் கூறினார்.
அரச தலைவர் ஆணைக்குழுவின் விசாரணையின்போது, நீதி விதிகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாகவும் தமக்கு முறையான விசாரணைகள் வழங்கப்படவில்லை. எமேலும் தனக்கு எதிராக சேகரிக்கப்பட்ட விடயங்கள், பகுத்தறிவற்ற மற்றும் தன்னிச்சையானவை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி பைஸ் முஸ்தபா முன்னிலையாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.