“பெட்ரோல் இருக்கிறது” எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள பதாகைகள்
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி உச்சம் தொட்ட நிலையில் மக்கள் எரிபொருளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் நின்றபோதிலும் இடையில் எரிபொருள் முடிந்து விட்டது என்ற அறிவிப்பு வெளிவந்ததும் கால் கடுக்க நின்ற மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அத்துடன் முன்னர் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இல்லை”, “டீசல் இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் எரிபொருள் நெருக்கடியை ஓரளவு குறைக்கும் நோக்குடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிசக்தி அமைச்சு qr முறையை கொண்டு வந்துள்ளது.
இதனால் வரிசை யுகம் குறைந்து அனைவரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெறுவதுடன் கள்ளச் சந்தையும் ஓரளவு ஒழிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், “பெட்ரோல் இருக்கிறது” என்று எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.