விபத்தில் சிக்கிய எரிபொருள் தாங்கி! (படங்கள்)
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
Accident
By Sumithiran
பெட்ரோல் ஏற்றிச் சென்ற பவுசர் விபத்து
மீரிகம தங்கொவிட்ட வீதியில் ஹலுகம மலைப் பாதையில் நேற்று 23ஆம் திகதி பிற்பகல் பெட்ரோல் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முத்துராஜவெலயில் இருந்து பேராதனைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த எரிபொருள் கையிருப்பில் 33600 லீற்றர் பெட்ரோல் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பெட்ரோலை சேகரித்த மக்கள்
ஹலுகம மலை உச்சியில் பௌசர் திடீரென பின்னோக்கி ஓடியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது நெடுஞ்சாலையில் பயணித்தவர்கள் பவுசர் கவிழ்ந்ததையடுத்து பாய்ந்த பெட்ரோலை சேகரித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
