உலகை உலுக்கிய காஸா குழந்தைகளின் புகைப்படங்கள்: சர்வதேசத்தில் எழுந்துள்ள கண்டனம்
காஸாவில் (Gaza) இருந்து வெளிவரும் புகைப்படங்களில் குழந்தைகளின் பயங்கரமான கோலம் பயத்தை ஏற்படுத்துவதாக பிரித்தானிய (United Kingdom) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.
அத்துடன், காஸா மக்களுக்கு உணவு விநியோகம் செய்ய பிற நாடுகளை அனுமதிக்கும் இஸ்ரேலின் (Israel) இந்த செயல் மிக மிக தாமதம் என்றும் கண்டித்துள்ளார்.
காஸாவில் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற செயற்பாடுகளால் பஞ்சம் ஏற்படும் அபாயம் குறித்து உணவு நிபுணர்கள் பல மாதங்களாகவே எச்சரித்து வந்துள்ளனர்.
இஸ்ரேல் நிர்வாகம்
ஆனால், தற்போதும் ஹமாஸ் படைகள் தங்களது நிர்வாகத்தை வலுப்படுத்த அங்குள்ள மக்களுக்கான உதவிப் பொருட்களை கடத்துவதாகக் கூறி இஸ்ரேல் நிர்வாகம் உணவு மற்றும் தண்ணீர் உட்பட அத்தியாவசிய உதவிகள் அனைத்தையும் முடக்கியது.
சமீப நாட்களாக வெளிவரும் உடல் மெலிந்த குழந்தைகளின் புகைப்படங்கள் இஸ்ரேல் மீதான உலகளாவிய விமர்சனத்தைத் தூண்டியதுடன், அதன் நெருங்கிய நேச நாடுகளும் கண்டிக்கத் தொடங்கின.
அத்துடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட போருக்கும் அது உருவாக்கிய மனிதாபிமானப் பேரழிவிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் அழைப்பு விடுத்துள்ளன.
புதிய நடவடிக்கைகள்
இதனிடையே, மனிதாபிமான உதவிகளுக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், மற்ற பகுதிகளில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர இருப்பதாகவும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட போருக்கும் அது உருவாக்கிய மனிதாபிமானப் பேரழிவிற்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, மனிதாபிமான உதவிகளுக்காக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதே வேளையில், மற்ற பகுதிகளில் ஹமாஸ் படைகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர இருப்பதாகவும் அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
