ட்ரம்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை: சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டது FBI
Donald Trump
United States of America
Gun Shooting
By Sumithiran
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை FBI வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு உயர் சக்தி துப்பாக்கியை காவல்துறையினர் தற்போது மீட்டுள்ள போதிலும், கொலையாளி குறித்து எந்த குறிப்பிட்ட தகவலும் வெளியிடப்படவில்லை.
கழுத்து பகுதியில் சுட்டுக்கொலை
உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையில் கலந்து கொண்டபோது 31 வயதான சார்லி கிர்க் கழுத்தில் சுடப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இரண்டு பேர் இரண்டு முறை கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

4ம் ஆண்டு நினைவஞ்சலி