பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

United States of America
By Kathirpriya Mar 22, 2024 11:53 AM GMT
Report

முதன்முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று கடந்த 16-ம் திகதியன்று இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம், வேமவுத் நகரைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்லேமன் என்ற 62 வயதுடைய ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 5 ஆண்டுகளில் அந்த சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது ஆட்டுக்குட்டி!

பன்றியின் சிறுநீரகம்

இதன்பின்னர் இஜெனிசிஸ் என்ற மருந்து நிறுவனத்திடம் இருந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பெற்று மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை | Pig Kidney Transplant Into Human In America

பன்றியின் மரபணுவில் சில மாற்றங்களை செய்த இஜெனிசிஸ் நிறுவனம், மனிதர்களை பாதிக்கக்கூடிய வகையில் பன்றியின் பாகங்களில் இருந்த வைரஸ்களையும் செயலிழக்க செய்ததாக கூறப்படுகிறது.

உலகின் முதலாவது கண் மாற்று சத்திரசிகிச்சை : பெருமிதம் கொள்ளும் வைத்தியர்கள்

உலகின் முதலாவது கண் மாற்று சத்திரசிகிச்சை : பெருமிதம் கொள்ளும் வைத்தியர்கள்

இரண்டு மாதங்களில் மரணம்

இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் சிறுநீரகத்தை குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சோதனை செய்துள்ளனர், அதில் ஒரு குரங்கு 176 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ள நிலையில் மற்றோரு குரங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக உயிர்வாழ்ந்துள்ளதை அவதானித்த பின்னரே ஆய்வாளர்கள் அத்தகைய சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை | Pig Kidney Transplant Into Human In America

இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு 57 வயது நிரம்பிய இதய நோயாளிக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது, இந்த அறுவை சிசிக்சையை, மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அந்த நோயாளி இரண்டு மாதங்களில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மீண்டும் உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா திரிபு: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

மீண்டும் உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா திரிபு: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்