மீண்டும் களமிறங்கும் பிள்ளையான் - விரைவில் நாடாளுமன்ற பதவியை துறப்பார்
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளளையான் ) (Sivanesathurai Chandrakanthan) மீண்டும் போட்டியிட உள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
அக்கட்சியின் தலைவரான அவர் கடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.
இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் பலத்த சவாலாக கிழக்கு மாகாணம் அமையலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.