“தோற்றுப்போன சாணக்கியன் தமிழ் தேசியம் பேசுகிறார்” பிள்ளையான் கடும் தாக்கு
tna
Sivanesathurai Chandrakanthan
Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam
By Vanan
சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தோற்றுப்போன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam )தற்போது தமிழ் தேசியம் பேசிவருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்(Sivanesathurai Chandrakanthan) விமர்சித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தவறான செயற்பாடுகளை எதிர்த்துக்கொண்டு தொடர்ந்தும் தாம் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.