மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம்

Batticaloa Mannar Pillayan
By Sumithiran Feb 20, 2024 11:01 PM GMT
Report

மட்டக்களப்பில் ஊறணி பகுதியில் கடந்த காலத்தில் சிறுமி ஒருவரை கடத்தி கப்பம் கேட்டு கப்பம் கொடுக்காத நிலையில் சிறுமியை கொலை செய்து கிணற்றில் போட்டவர்கள் என மக்களால் குற்றம் சாட்டப்பட்ட பிள்ளையான் குழுவினர் இன்று மன்னாரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு போராடுவது ஏளனமானது என்பதுடன் வேடிக்கையானது கோழைத்தனமானது என சிவில் சமூக செயற்பாட்டாளரும் வடகிழக்கு முன்னேற்றகழக தலைவருமான கு.வி. லவக்குமார் தெரிவித்தார்.

மட்டு கிரானில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சந்தேக நபர் தடுப்புகாவலில்

மன்னாரில் 10 வயது சிறுமியை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய காவல்துறை தடுப்பு காவலில் உள்ளார். இப்படியான செயலை செய்கின்றவர்கள் தண்டிக்கப்படவேண்டும் எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்ற நிலைகள் மாற்றப்படவேண்டும் என்பதுடன் இந்த சிறுமி கொலையை சிவில் சமூகம் என்றவகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம் | Pillaiyan Group Protesting Mannar Girl S Murder

இருந்தபோதும் இந்த சிறுமி கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் செவ்வாய்க்கிழமை பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கம் வகிக்கும் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளீர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் ஆட்சேபனை

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அங்கம் வகிக்கும் பிள்ளையான் தலைமையில் கடந்த 2006,2007 ம் ஆண்டு காலப்பகுதியில் அவர் எப்படி செயற்பட்டார் என்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும் சரி வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் யாவரும் அறிந்த உண்மையாக இருக்கின்றது.

பிள்ளையான் குழு மீது பாரிய குற்றச்சாட்டு

மாவட்டத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் உட்பட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் தீவுச்சேனை என்ற பிரதேசம் மர்மமாக்கப்பட்டுள்ளது பலரை கொலை செய்ததாகவும் பலரை கடத்தியதாகவும் கடத்தலுக்கு தலைமை தாங்கியதாகவும் இவர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றது.

மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம் | Pillaiyan Group Protesting Mannar Girl S Murder

எனவே இவர்கள் ஒரு போராட்டத்தை ஆயத்தப்படுத்தும் போது தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முதலில் பார்க்கவேண்டும். உண்மையில் உரிமை கேட்டு போராடுவதற்கு இவர்கள் தகுதி அற்றவர்கள். இது வெறுமனவே போராட்டம் அல்ல எதிர்வரும் காலங்களில் நடைபெறப் போகின்ற தேர்தல் மற்றும் தங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் பறிக்கப்படும் என்ற பயத்திலே தான் இவ்வாறான போராட்டத்தை செய்கின்றனர் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது இஸ்ரேல்

பிணைக்கைதிகளை விடுவிக்க காலக்கெடுவை நிர்ணயித்தது இஸ்ரேல்

நீதி கேட்டு போராடுவதற்கு தகுதி இருக்கின்றதா

இவ்வாறான குற்றச்சாட்டுகளுடன் வாழுகின்றவர்கள்; நீதி கேட்டு போராடுவதற்கு தகுதி இருக்கின்றதா என பார்க்கவேண்டும். தமது கடந்தகால வாழ்கை இவர்களின் குழுக்கள் எப்படிப்பட்டவர்கள் என பார்க்க வேண்டும்.

மன்னார் சிறுமி கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் பிள்ளையான் குழு : கேலிக்கூத்தென கண்டனம் | Pillaiyan Group Protesting Mannar Girl S Murder

அந்த காலப்பகுதியில் எனது கிரான் விபுலானந்த வீட்டின் வீதியிலுள்ள சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் நமசிவாயம் புவனேஸ்வரன் செந்தூரன் இன்னொருவர் கொல்லப்பட்டார்கள். இதற்கு காரணம் இந்த குழுக்கள் என மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

கப்பல் மூலம் இந்தியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இவ்வாறு இந்த போலியான வேடிக்கையான போராட்டத்தை செய்கின்ற இவர்களை பார்க்கின்ற மக்கள் இவர்களுக்கு பின் செல்வீர்களானால் மறுபடியும் இவர்கள் ஏமாற்றி உங்கள் பிள்ளைகளை காவு கொடுப்பவர்களாக செயற்படுவார்கள் எனவே மக்கள் அவதானம் என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, Le Bourget, France

28 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தண்ணீரூற்று, இராமநாதபுரம், Hayes, United Kingdom

02 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், செட்டிக்குளம், Mississauga, Canada

19 Mar, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, Mississauga, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, England, United Kingdom

25 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
18ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France, வவுனியா

28 Mar, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, மானிப்பாய், Ontario, Canada

26 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023