பிள்ளையானால் 'முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது' : எச்.எம்.எம்.ஹரீஸ்

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Sri Lanka Parliament Pillayan Sivanesathurai Santhirakanthan
By Shadhu Shanker Sep 12, 2023 12:11 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

போலியான கருத்துக்களை வெளியிட்டு பிள்ளையான் போன்றவர்கள் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயலாளராக இருந்த அசாத் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தினால் மக்கள் பல்வேறு சந்தேகங்களுடன் இப்போது இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது முஸ்லிம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்றிரவு (11) இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிள்ளையானால்

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது” : ஆசாத் மௌலானா (காணொளி)

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது” : ஆசாத் மௌலானா (காணொளி)

பயங்கரவாத முத்திரை

மேலும், கருத்து தெரிவித்த அவர், சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ள பிள்ளையான் தன்னை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துவதை நிறுத்த வேண்டும்.

சஹ்ரானின் சகோதரருடன் தொடர்புள்ளதை பல இடங்களில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் : அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் (படங்கள்)

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் : அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் (படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தற்போது முஸ்லிம் மக்கள் மீது சிலர் சுயநலத்திற்காக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எம்மால் ஏற்க முடியாது.

நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு

மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தாக்குதல் தொடர்பிலான மௌலானாவின் ஊடக கருத்தினை அடிப்படையாக கொண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு அதிபர் நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் .

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழு நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கைகள் மழுப்பல் நிலையிலையே வெளிவந்தது. அதில் யாருக்கும் திருப்தியில்லை. இந்த தாக்குதலானது பாரதூரமான விளைவுகளை உண்டாக்கிய ஒன்றாகும். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச காவல்துறையின் புலனாய்வு அறிக்கைகள் பெறப்பட வேண்டும்.

பிள்ளையானால்

ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகளை மன்னிக்கத் தயார் : மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதலின் குற்றவாளிகளை மன்னிக்கத் தயார் : மல்கம் ரஞ்சித்

சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குதல்களின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார்.

இந்த தாக்குதல்களில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார். 

முரளிதரனின் '800' திரைப்படத்தில் ஏற்படப்போகும் திருத்தம்

முரளிதரனின் '800' திரைப்படத்தில் ஏற்படப்போகும் திருத்தம்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025