பிள்ளையானுக்கு போபியா Attack! காரணம்...
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் என்ற புதிய அரங்க காட்சியுடன் இந்த வாரம் இலங்கையில் இருந்து ஈரானுக்கு திரும்பிய ஈரானிய கடற்படையினர் மீண்டும் ஈரானிய படைத்துறையின் இணைந்தார்களா என்பதை அறியும் மேற்குல ஊடகபுலனாய்வுகளும் தொடர்கின்றன.
இலங்கையின் கடற்பரப்புக்கு அப்பால் கடந்த மாதம் அமெரிக்க நீர்மூழ்கி ஒன்றின் நீரடி உந்துகணையால் (டோர்ப்பிட்ரோ) மூழ்கடிக்கப்பட்ட பின்னரான நகர்வுகளை மையப்படுத்தி இந்த சிண்டு முடிவுகள் வருகின்றன.
உள்ளுரில் வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிள்ளையானுக்கு வந்துள்ள தனிச்சிறை போபியா குறித்த செய்திகள் வரும் நிலையில் இவ்வாறான வெளிச்செய்திகளும் வருகின்றன பிள்ளையான் கடந்த சிலநாட்களாகவே சிறைத்துறையால் பந்தாடப்படுகிறார்.
வெலிக்கடைச் சிறையில் இருந்து அவர் திடீரென பாதுகாப்பு காரணங்களில் கண்டி தும்பற சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இதன்பின்னர் ஏனோ தெரியவில்லை மீண்டும் அவர் வெலிகடை சிறைச்சாலைகயில் விசேட பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றபட்ட நிலையில் இந்த திடீர் தனி கவனிப்பு குறித்து அச்சமடைந்த அவர் இந்த தனி கவனிப்பை எதிர்த்து இந்தவாரம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு நிலையில் நேற்று வெலிக்கடை சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னரான உள்ளுர் உலக நிலவரங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |