சிறிலங்காவுடன் மின் வலையமைப்பில் இந்தியா! ஒரு வாரத்தில் முடிவு
இந்தியாவுடன் சிறிலங்காவின் மின்சார வலையமைப்பை இணைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நிர்மாணத்திட்டம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜூலை மாத இந்திய விஜயத்தின் போது, இரண்டு நாடுகளும் தமது மின்சார வலையமைப்பை இணைக்கும் வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டிருந்தது.
ஒரு வார காலத்தில் முடிவு
இந்த நிலையில் கடலுக்கு அடியில் கம்பி வடங்களை பொருத்தி இந்த திட்டங்களை முன்னெடுப்பதா அல்லது கடற்பரப்பில் மின்சார கம்பங்களை நிறுவி இந்த இணைப்பை மேற்கொள்வதா என்ற விடயத்தில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை அறிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த மின்விநியோக பாதையின் மொத்த தூரம் சுமார் 120 கிலோமீட்டர் இருக்கும் எனவும் இந்த விடயத்தில் இந்தியாவும் சிறிலங்காவும் ஒரு வார காலத்தில் ஒரு முடிவை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் தனது மின்சார வலையமைப்பை இணைத்துள்ள நிலையில் இப்போது கடல்கடந்து இலங்கையிலும் அது விரிவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெனிவா மனித உரிமை அரங்கில் சிறிலங்கா தொடர்பான வழமையான பல்லவியை வெளிப்படுத்திய இந்தியா, 13ஆவது திருத்தச் சட்ட நடைமுறை மற்றும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டியதன் கரிசனைகளையும் முன்வைத்திருந்தது.
இதே சமகாலத்தில், இந்தியாவுடன் சிறிலங்காவின் மின்சார வலையமைப்பை இணைக்கும் திட்டங்கள் குறித்த இறுதி முடிவும் இன்னும் ஒருவாரத்தில் எடுக்கப்படவுள்ளதான செய்திகளும் வந்த நிலையில், இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்தி வீச்சு,