2030 ஆம் ஆண்டுக்குள் முடிவிற்கு கொண்டுவருவோம் - உலகத் தலைவர்கள் சபதம்
உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில்plan is to end deforestation by 2030வருவதாக உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் உறுதியளித்துள்ளனர்.
எனினும் இந்த மாநாட்டின் மூலம் ஒன்று சேரந்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள் மனித குலத்தின் எதிர்காலத்தை தீவிரமாக எடுக்காமல் பாசாங்கு செய்வதாக காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பேர்க் தெரிவிக்கின்றார்.
உலக வெப்பமாதலை தடுக்கும் வகையில் கோப் - 26 காலநிலை மாற்ற மாநாட்டில், தமது நாடுகள் வெப்பமாதலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று அறிக்கையிட்டிருந்தனர்.
இதில் குறிப்பாக கரியமில வாயுவை குறைப்பது தொடர்பிலும் அது தொடர்பில் தமது நாடுகள் மேற்கொள்ளும் உபாயங்ளையும் பட்டியலிட்டிருந்தனர்.
எனினும் காபன் உற்பத்தியால் வெளியிடப்படும் கரியமிலவாயுவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் முக்கிய பொருளாதார நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளன.
உலகளாவிய வெப்பமாதலை 1 தசம் 5 பாகை செல்ஸியசால் மட்டப்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்படும் என மாநாட்டிற்கான தலைவர் அலோக் ஷர்மா நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதனால் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பாரிய சிக்கலை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்நிலையில் வெப்பத்தை அதிகரிக்கும் கரியமில வாயு வாயுவை காடுகள் அதிகளவில் உறிஞ்சும் என்பதை சுட்டிக்காட்டி, காடழிப்பை நிறுத்துதல் மற்றும் மீளவும் செயற்கை காடுகளை உருவாக்குதல் உள்ளிட்டவை தீர்மானமாக கொண்டுவரப்பட்டன.
இதன்படி காடழிப்பை எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் முடிவிற்கு கொண்டுவருவதாக உலக நாட்டு தலைவர்கள் உறுதயளித்துள்ளனர்.