ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகளை கட்டுப்படுத்த அதிரடி திட்டம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலான மூன்று முக்கிய திட்டங்களுக்கு அதன் உள்துறை அமைச்சர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பதவியில் உள்ள டென்மார்க்கால் கூட்டப்பட்ட சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமான மூன்று திட்டங்களுக்கு அங்கீகாரம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்குள் குடியேறிகளின் வருகை கட்டுப்படுத்துவது, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டங்களை தீவிரப்படுத்துவது, போன்ற முக்கியமான மூன்று திட்டங்களுக்கும் நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளுக்கு வெளியே குடியேறிகளுக்குரிய மையங்களைத் திறப்பது, புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை அங்கு தங்க வைப்பது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட்டு விட்டு வெளியேற மறுக்கும் சட்டவிரோத குடியேறிகளுக்கு நீண்ட கால தடுப்புக் காவல் தண்டனைகளை விதிப்பது உட்பட்ட நகர்வுகள் திட்டமிடப்படுகின்றன
வேறொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கும் திட்டம்
இதேபோல அகதி தஞ்சம் வழங்கப்பட்டாலும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவர்களை ஒன்றியநாடுகள் அல்லாத வேறொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் புகலிடம் கோருபவர்களை பகிர்ந்து கொள்ளும் ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான திட்டங்களை ஏற்கமறுக்கும் சக உறுப்பு நாடுகள் அவ்வாறாக தாம் மறுக்கும் ஒவ்வொரு குடியேறிக்கும் 20,000 யூரோ நிதி பங்களிப்பை ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
கிரேக்கம் மற்றும் இத்தாலி போன்ற ஏனைய உறுப்பு நாடுகளில் இருந்து குடியேறிகளை ஏற்றுக்கொள்ள பெல்ஜியம், சுவீடன் மற்றும் ஒஸ்திரியா உள்ளிட்ட சில நாடுகள் மறுக்கும் நிலையில் இந்த அபராதத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |