சுற்றுலாத் தலங்களாக மாறப்போகும் அஞ்சல் நிலையங்கள்
இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக அஞ்சல் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.03.2025) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணி
அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து, இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்