அமெரிக்காவில் கீழே விழுந்து பற்றி எரிந்த விமானம்
அமெரிக்காவில் (United States) குடியிருப்பு பகுதியில் விமானமொன்று விழுந்து பாரிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (29) மினசோட்டா (Minnesota) புறநகர் பகுதியான புரூக்ளின் பார்க்கில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒற்றை எஞ்சின் SOCATA TBM7 ரக விமானம், அனோகா கவுண்டி-பிளெய்ன் விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.
சரியான எண்ணிக்கை
எதிர்பாராதவிதமாக, குடியிருப்பொன்றின் வீட்டின் மீது மோதியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எரிந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்தவர்களின் சரியான எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள் விசாரணை
ஆரம்பகட்ட தகவலின்படி, விமானத்தில் பயணம் செய்தவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த விபத்தில் வீட்டின் குடியிருப்பாளர்கள் காயமின்றி தப்பியதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) அதிகாரிகள் விபத்துக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
