நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு
விமானமொன்று நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் ஜன்னல் திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்றையதினம்(02) நடைபெற்றது.
தனியார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 'எஸ்ஜி1080' விமானம் நேற்று கோவாவில் இருந்து மஹாராஷ்டிராவில் புனே நகருக்கு பயணிகளுடன் புறப்பட்ட நிலையிலேயே குறித்த விமானத்தின் ஜன்னல் திடீரென விலகியது.
விமான நிறுவனம் விளக்கம்
இந்த சம்பவத்தை பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கியதும் சரி செய்யப்பட்டதாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
#SpiceJet from Goa to Pune today. The whole interior window assembly just fell off mid flight. And this flight is now supposed to take off and head to Jaipur. Wonder if it’s air worthy @ShivAroor @VishnuNDTV @DGCAIndia pic.twitter.com/x5YV3Qj2vu
— Aatish Mishra (@whatesh) July 1, 2025
இதில் பயணிகள் பாதுகாப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்றும் விமான நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
