நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள் - 4 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு ஸ்பெயினின் ஏரோட்ரோம் அருகே நேற்று இரண்டு அல்ட்ரா லைட் விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானங்கள் விபத்துக்குள்ளானதை பார்த்த சாட்சி ஒன்று எழுப்பி எச்சரிக்கையை தொடர்ந்து, பிராந்திய அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
முதல் விமானம் பார்சிலோனாவின் வடக்கு மோயா ஏரோட்ரோம் அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருப்பதை தீயணைப்பு வீரர்கள் முதலில் கண்டுபிடித்தனர்.
விபத்துக்கான காரணங்கள்
அத்துடன் விமானத்தின் தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்து இரண்டு உடல்களை மீட்டனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மணி நேரங்களுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் சேதமடைந்த இரண்டாவது விமானத்தை முதல் விமானத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் கண்டுபிடித்தனர்.
அந்த விமானத்தில் இருந்தும் இரண்டு உடல்களை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர்.
ஆனால் விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரிய வராத நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் சிவில் விமானப் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
