கிரகப் பெயர்ச்சிகளால் இலங்கை மக்களுக்கு கஷ்டமான நிலைமை ஏற்படும் - பிரபல ஜோதிடர்
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் கட்டாயம் தேர்தல் ஒன்றை நடத்த நேரிடும் என்பது கிரக சுழற்சிகள் மூலம் தெரிகிறது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ. சரத் சந்திர (K.A.U. Sarath Chandra) தெரிவித்துள்ளார்.
வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
நடைபெற உள்ள சனி மற்றும் குரு பெயர்ச்சிகள் காரணமாக எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்குள் புதிய அரசியல் சக்தி முன்நோக்கி வரும்.
முன்நோக்கி வரும் அந்தப் புதிய அரசியல் சக்தி நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். மக்களுக்கு புத்தி தெளிவு ஏற்பட்டு, மக்களே அந்தப் புதிய அரசியல் சக்தியை உருவாக்குவார்கள்.
ஆட்சியாளர்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். அரசியல் கட்சித் தாவல்களும் நடக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் அரசியல் கருத்து முரண்பாடுகள் ஏற்படும். அத்துடன் இந்தக் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக இலங்கை மக்களுக்கு கஷ்டமான நிலைமை ஏற்படும் என சரத் சந்திர குறிப்பிட்டுள்ளார்.