ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் கிரகங்கள் : எப்போது தெரியுமா..!
சூரிய குடும்பத்தில் உள்ள புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன.
சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அதனதன் சுற்றுப்பாதையில் வெவ்வேறு கால அளவுகளில் சூரியனை சுற்றிவருகிறது.
இந்த கோள்கள் அனைத்தும், ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்வது என்பது அரிதான ஒரு நிகழ்வு. அந்த அரிதான நிகழ்வு வரும் ஜூன் மாதம் 3ம் திகதி அதிகாலையில் வானில் நிகழ உள்ளது.
ஒரே நேர்கோட்டில் வர உள்ள கிரகங்கள்
அதாவது புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன.
வெற்றுக் கண்ணால் பார்க்கலாமா
இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வானில் இது கிரகங்களின் அணிவகுப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |