வடக்கில் கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் சவால் : யாழில் கலந்துரையாடல்
வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டு வரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (25) நடைபெற்றது.
வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்ட மனு
இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
வடமாகாணத்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரசினைகளை முன்வைத்தனர்.
தொடர்சியாக தமது பிரச்சினைகளை தமது சார்பில் நாடாளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் (Sivagnanam Shritharan) மற்றும் செ.கஜேந்திரன் (Selvarajah Kajendren) ஆகியோர் கலந்து கொண்டதுடன், சுமந்திரன்(M. A. Sumanthiran) செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |