கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இளம் வயது ஓவியர்
உலக புகழ்பெற்ற கின்னஸ் உலக சாதனைகளில் (GWR) உலகின் இளைய ஆண் கலைஞராக ஏஸ் லியாம் என்ற சிறுவன் தனது பெயரை பதித்துள்ளார்.
ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா என்ற சிறுவனுக்கு வயது,1 வருடமும், 152 நாட்களும் ஆகும். அவர் ஆறு மாத குழந்தையாக இருந்தபோதிலிருந்தே ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார்.
அண்மையில், ஏஸ் லியாம் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிந்த நிலையில், அதில் அவரது 10 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.அவற்றில் 9 ஓவியங்கள் நிகழ்வின் போது விற்கப்பட்டுள்ளன.
இளம் வயதில் ஓவியர்
இந்த சாதனை அவரது மக்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், GWR பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்பட்டதற்கு காரணமாக இருந்ததோடு அதன் மூலம் உலகளாவிய பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் அவரது தாயார் தெரிவிக்கையில், என் மகனுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பது ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே தெரிய வந்தது.
அவன் நடக்க கற்றுக்கொண்டிருக்கும் போது நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனவே குழந்தையையும் வேலையாக வைத்திருக்கும் விதமாக கேன்வாஸ் பேப்பரை தரையில் விரித்து, அதன் மீது நிறப்பூச்சுகளை ஊற்றினேன்.
கின்னஸ் புத்தகத்தில் பெயர்
அவர் அந்த கேன்வாஸ் பேப்பர் முழுவதும் அந்த நிறப்பூச்சுகளை பூசினார். அதன் செயல்பாட்டில், அவர் தனது முதல் தலைசிறந்த படைப்பான தி க்ராலை உருவாக்கினார் .
இதிலிருந்து அவருக்கு ஓவியம் வரைவதிலிருக்கும் ஆர்வம் புரிந்தது.இதனை தொடர்ந்து மேலும் பல ஓவியங்கள் வரைந்தான். அதன்பிறகு தான் எனது மகனுக்கு ஓவியம் வரைய பயிற்சி அளித்தேன்.
இதனால் தான் என் மகனுக்கு கின்னஸ் உலக சாதனை பக்கத்தில் உலகின் இளைய ஆண் ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |