தொழிலாளர்களின் 1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்
Sri Lanka Upcountry People
Sri Lanka
Money
By Shalini Balachandran
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை சம்பளம்
இந்தநிலையில், அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாக சக்திவேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்