பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1550 ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அதற்கு மேலதிகமாக, வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 200 ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கான வேதனம் 1750 ரூபாயாக அதிகரிப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.
அனைத்து நிறுவனங்களும் முறையாக அபிவிருத்தி செய்து, வருமானத்தை அதிகரித்து, பெருந்தோட்ட மக்களுக்கு முறையான கொடுப்பனவை வழங்காவிடத்து, அவை அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும். 2042 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு நிறுவனத்தின் ஒப்பந்தமும் நீடிக்கப்படாது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |