சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை - சீனா கூட்டு முயற்சி - பிரதமரின் வலியுறுத்தல்

Sri Lanka Tourism China Tourism
By Kathirpriya Aug 18, 2023 07:57 AM GMT
Report

 "இந்த தசாப்தம் ஆசியாவின் தசாப்தம் எனவும், இதனால் இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மற்றும் சீனா இணைந்தே மேற்கொள்ள வேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.

சீனாவின் வர்த்தக அமைச்சு மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்திய ஏழாவது சீனா-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதில் சீன சுற்றுலாப்பயணிகள் பெரும் பங்காற்றியிருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன அரசாங்கத்திற்கு நன்றி

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை - சீனா கூட்டு முயற்சி - பிரதமரின் வலியுறுத்தல் | Pm Promote Tourism Between China And Sri Lanka

சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ள ஏதுவான சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையை சீன சுற்றுலாப்பயணிகள் இணைத்தமைக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்

கடந்த ஆண்டின் (2022) ஜுலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் 1,850 சீன சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் இந்த வருடத்தின் ஜுலை மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28,000 இற்கும் அதிகமான சீன சுற்றுலாப்பயணிகளை இலங்கை வருகைதந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான வருமானம்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை - சீனா கூட்டு முயற்சி - பிரதமரின் வலியுறுத்தல் | Pm Promote Tourism Between China And Sri Lanka

இதன் வாயிலாக, ஜூலை மாத இறுதியில் சிறிலங்கா அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானத்தை இலங்கையின் சுற்றுலாத்துறையினால் ஈட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் சீனா வழங்கிவரும் ஆதரவுகளுக்கு தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவி சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி