ரிஷி சுனக்கிற்கு தலையிடியாக மாறிய எச்சரிக்கை கடிதம்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மிக அதிகமாக உள்ளதாக தெரிவித்தே அவர்கள் எதிர்ப்பு அலையை பிரயோகித்துள்ளனர்.
எச்சரிக்கை கடிதம்

அரசின் திட்டங்களில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, சமத்துவம் இருந்தால் அரச பணத்தை மிச்சப்படுத்தலாம் என 'கன்சர்வேடிவ் முன்னேற்றம்' என்ற குழுவைச் சேர்ந்த குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரிஷி சுனக்கிற்கு எழுதியுள்ள எச்சரிக்கை கடிதத்தில் கூறியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து காணப்படாத அளவில் பொதுமக்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், புதிய சவாலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
லிஸ் ட்ரஸ்

இதேவேளை, முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியேற்ற காலப்பகுதியில் நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்திருந்தது.
அவரது தலைமையில் அறிவிக்கப்பட்ட பாதீடு மற்றும் வரி குறைப்புகள் - சலுகைகள் என்பன நாட்டின் பொருளாதார நிலைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனால், அவர் மீதான நம்பிக்கை குறைந்த நிலையில், அவருக்கு ஆதரவளித்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவருக்கு எதிரான திரும்பினார்.
பின், கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அவரை பதவி விலக வலியுறுத்திய நிலையில், லிஸ் ட்ரஸ் பதவியேற்று 44 நாட்களில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.