ரணிலின் ஊடகப் பிரிவினருக்கே நாட்டில் நம்பிக்கை இல்லை: சஜித் குற்றச்சாட்டு
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவினருக்கே நாடு செல்லும் போக்கில் நம்பிக்கை இல்லையென்றால் நாட்டில் உள்ள ஏனைய மக்களின் நிலைமை என்னவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள்
அத்தோடு, அதிபருடன் நாடு திரும்பிய பின்னர் அதே வீசாவைப் பயன்படுத்தி இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறியவர்கள் பற்றிய பெயர்கள் மற்றும் கிராமங்களுடன் கூடிய தகவல்கள் இருப்பதாகவும், அது நெறிமுறைக்கு புறம்பானது என்பதாலேயே அவற்றை வெளியிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி