மகிந்தவின் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டதா? வெளியானது அறிவிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்(Mahinda Rajapaksa) தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை என பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட(Rohan Welivita) கொழும்பு ஆங்கில் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறானதொரு சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அறிந்திருக்கவில்லை. மேற்படி சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் “எனக்குத் தெரிந்த வகையில் தவறானவை” என்றார்.
இதேவேளை, அமைச்சர் நாமல் ராஜபக்(Namal Rajapaksa)ஷ தந்தையின் வங்கிக் கணக்கு சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியாது என நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வரவில்லை, நடக்கவில்லை என்றும், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளைப் பார்த்த பிறகுதான் தமக்கே தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
