இரண்டு தவறுகளை செய்துள்ளது பொதுஜனபெரமுன : ஒப்புக்கொள்கிறார் செயலாளர்
நாட்டு மக்களுக்காக நாங்கள் இரண்டு தவறுகளை செய்தோம், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என பொலனறுவையில் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள "சத் ஜனரள" கூட்டத் தொடரின் ஆரம்ப கூட்டம் இன்று (06) காலை பொலனறுவை கிரித்தலே பிரதேசத்தில் நடைபெற்றது.
பொலநறுவையில் ஆரம்பமான முதலாவது கூட்டம்
பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவர் சிறிபால கம்லத் மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, திஸ்ஸ குட்டியாராச்சி, டி.வி.சானக்க, இந்திக அனுருத்த, தேனுக விதானகம, ஜகத் சமரவிக்கிரம, ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயதுன்ன உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
அதிகாரத்தை காப்பாற்ற தலைவர்களால் முடியவில்லை
"இந்த நாட்டின் பிள்ளைகளுக்காக, இந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்காக ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்பவே இந்த கட்சி உருவாக்கப்பட்டது. அதற்காக பொதுஜன பெரமுன சிறந்த முறையில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச சக்தியை வழங்கியது. அதற்காக உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தீர்கள்.ஆனால் அதிகாரத்தை காப்பாற்ற தலைவர்களால் முடியவில்லை.
நாட்டு மக்களுக்காக நாங்கள் இரண்டு தவறுகளை செய்தோம், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் ஒன்று, கொரோனா வைரஸின் போது நாடு மூடப்பட்டது, ஆனால் அது இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க செய்யப்பட்டது. இந்நாட்டு மக்கள் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு இந்த இரண்டு தவறுகளையும் செய்துள்ளோம். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஒரு கட்சியாக இந்த நாட்டின் அழிவை தடுக்கவே இந்த கட்சியை உருவாக்கினீர்கள்.கலாச்சாரத்தை அழித்து நாட்டை அழிக்க முடியும்.கலாசாரம் இல்லாத நாடு இருக்க முடியாது.
எனவே பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்.அடுத்த அதிபர் தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளரை அதிபர் வேட்பாளராக முன்வைப்போம்.எனவே இந்த நாட்டை கட்டியெழுப்ப எமது தலைவர்களில் ஒருவரை நியமித்து ஒன்றிணைந்து செயற்படுவோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |