ரணிலுக்கான ஆதரவு : பொதுஜன பெரமுன எடுக்கவுள்ள தீர்மானம்
தாம் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படும் என நம்புவதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
தனக்காக மட்டுமன்றி ஒரு கட்சி என்ற ரீதியிலும் அதனை எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்தார்.
ரணில் அறிந்திருக்கவேண்டிய விடயம்
கட்சியுடன் கலந்துரையாடி கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற்று முன்னோக்கிச் செல்ல அதிபர் ரணிலும் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், அது சரியான முறையில் நடைபெறவில்லை எனத் தோன்றும்போது, கட்சிக்காரர்கள் சில கருத்துக்களை வெளியிடத் தூண்டப்படுகின்றனர் என அவர் கூறினார்.
தேர்தல் அறிவிக்கப்படும் வரை
எனினும், பொதுத் தேர்தலோ அல்லது அதிபர் தேர்தலோ அறிவிக்கப்படும் வரை, அதிபருக்கு வழங்கிய ஆதரவில் இருந்து விலகுவது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும், தேர்தல் வரும்போது கட்சி ரீதியாக எடுக்கப்படும் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.