பொறுப்பில்லாமல் செயற்படும் பருத்தித்துறை போக்குவரத்து சபை..! பரிதவிக்கும் மக்கள்
Jaffna
Srilanka Bus
By Erimalai
யாழ்ப்பாணம் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபையினர் தமது பேருந்து சேவைகளை சீராக மேற்கொள்ளாமயால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
நேற்று(25) யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தடத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு பருத்தித்துறை நோக்கி வரவேண்டிய பேருந்து 6:50 மணிக்கே தனது சேவையை தொடர்ந்ததால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள்
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் மக்களால் முன்வைக்கபட்டு வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தெடார்பாக உரிய கவனமெடுத்து போக்குவரத்திற்கு சீரான வழிசமைக்க வேண்டுமென பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
9ம் ஆண்டு நினைவஞ்சலி