நாடளாவிய சோதனையில் நூற்றுக்கணக்காணோர் கைது...!
Sri Lanka Police
Sri Lanka
By Shalini Balachandran
நாடளாவிய ரீதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 26,606 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின்போது 463 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கட்டளை பிடியாணை
கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 12 பேரும், கட்டளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 360 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 165 பேரும் அடங்குவர்.

மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 324 சாரதிகளும், அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 119 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |