திருகோணமலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
திருகோணமலை - சேருநுவர காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட லிங்கபுரம் காட்டுப் பகுதியில் மறைமுகமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சேருநுவர காவல் துறையினரால் இன்று (14) முற்றுகையிடப்பட்டது.
சேருநுவர காவல் நிலையப் பொறுப்பதிகாரி.ஜி.சி.கே.நாகந்தல தலைமையிலான குழுவினரே இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட விரோத விற்பனை
இதன்போது 144 கசிப்பு போத்தல்களும், 2 இலட்சத்து 59 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கோடா என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
அவை மாத்திரமன்றி, வடங்கள் (wire), பீப்பாய்கள், கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையினை சட்ட விரோதமாக நிகழ்த்தி வருவதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள் 43,30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
சந்தேக நபர்கள் இருவரும் சேருநுவர காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை மூதூர் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் என்றும் அதற்கான நடவடிக்கைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.