இன்று அதிகாலை பொலிஸ் சோதனைச்சாவடியில் சிக்கிய இளைஞன்
srilanka
arrest
police
theft
By Vasanth
இன்று அதிகாலை பொலிஸாரின் வீதிச்சோதனைச்சாவடியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தச்சம்பவம் தெமட்டகொடயில் இடம்பெற்றுள்ளது.
கைதான இளைஞரிடமிருந்து வாகனங்களில் இருந்து திருடப்பட்ட 16 சோடி கண்ணாடிகளையும் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
. குறித்த இளைஞர் கொழும்பு பஞ்சிகாவத்தையில் வசிப்பவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். அண்மைக்காலமாக கொழும்பில் வாகன கண்ணாடிகள் அதிகளவில் திருட்டு போவதாக தகவல்கள் வெளியாகின.
வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் தமது வாகன கண்ணாடிகள் திருடப்பட்டதாக பல வாகனங்களின் உரிமையாளர்கள் நேற்றையதினம் கொலனாவ பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி