போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்பனை செய்த இளைஞன்
போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்றைய தினம் (25) காத்தான்குடி காவல்துறையினர் இந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
பிரதம காவல்துறை அதிகாரி கஜநாயக்க தலைமையில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் 32 வயது நிறைந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவரிடமிருந்து ஏறத்தாழ மூன்று கிராம் அளவு ஐஸ் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்தல்
போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது
இந்நிலையில், குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் குறித்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணத்தால் குறித்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்யும் நிமித்தம் தனது சொந்த சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், இவருடன், 2.4 லிட்டர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மற்றுமொரு சந்தேக நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி வரை காவலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் எம்.எச்.எம். ஹம்சா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வரும் நிலையில் இது மிகப்பெரியதொரு போதைப்பொருள் பரிமாற்றத்தின் கணிசமான அளவு பிடிபட்டிருக்கலாம் என் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |