கொரோனா சிகிச்சை மையத்திற்கு வீசப்பட்ட பந்துகள்! இரகசியம் வெளியானது..
srilanka
corona virus
ajith rohana
By Vasanth
வெலிகந்தையில் உள்ள கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்திற்கு நேற்று வெளியே இருந்து இரண்டு பந்துகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த 2 பந்துகளிலும் இரகசியமாக போதை மாத்திரைகள் நிரப்பப்பட்டு இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் போதைக்கு அடிமையானவர்களின் பயன்பாட்டிற்காக ஒரு நபர் அல்லது ஒரு குழு போதைப்பொருள் நிரப்பப்பட்ட பந்துகளை வீசியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
மேலும் குறித்த பந்துகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி