இலங்கையில் நாளைய தினம் தீர்மானம் மிக்க நாள்! பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்
corona
police
viruscovid-19-sri-lanka
By Vasanth
தற்போதைய சூழ்நிலையில் நாளைய தினம் தீர்மானம் மிக்க நாளாக அமைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், பண்டிகை நிகழ்வுகளை நாளைய தினம் (வியாழக்கிழமை) குடும்பத்தாருடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
நாளைய தினம் தீர்மானம் மிக்கதாகும், குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.
பொதுப் போக்குவரத்து மற்றும் கொழும்பிலிருந்து வௌியேறும் பேருந்துகளில் நாளை மீண்டும் அதிகாரிகள் சிவில் உடையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர் என்றார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி