யாழில் தொடர் உண்டியல் திருட்டு - கையும் களவுமாக சிக்கிய இளைஞன்
யாழ்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவில் நான்கு நாட்களுக்கு முன் சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் உண்டியல் திருட்டு இடம்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்
இதனை தொடர்ந்து விசரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சிசிடி கமரா உதவியுடன் இன்று சந்தேக நபர் ஒருவர் வண்ணார்பண்னை சிவன் கோவிலடி முன்னால் உள்ள உணவகத்தில் வைத்து கைதுசெய்து விசாரித்தனர்.
ஐந்து கோயில்களில் திருட்டு

இதன்போது அவரிடம் இருந்து ஒரு தொகை உண்டியல் பணங்களும் மீட்கப்பட்டது
கொழும்புத்துறை துண்டியை சேர்ந்த 35 வயதுடைய குறித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே யாழ் நகர பகுதியில் ஐந்து கோயில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யபட்டு 3 மாதம் வரை சிறையில் இருந்து அண்மையில்தான் வெளிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.